Saturday, April 1, 2023

18 சித்தர்களின் பெயர் பட்டியல்

18 சித்தர்களின் பெயர் பட்டியல்

 18 சித்தர்களின் பெயர் பட்டியல் –

1. திருமூலர்
2. இராமதேவர்
3. கும்பமுனி
4. இடைக்காடர்
5. தன்வந்திரி
6. வால்மீகி
7. கமலமுனி
8. போக நாதர்
9. மச்ச முனி
10. கொய்கணர்
11. பதஞ்சலி
12. நந்தி தேவர்
13. போதகுரு
14. பாம்பாட்டி
15. சட்டைமுனி
16. சுந்தரானந்த தேவர்
17. குதம்பைச் சித்தர்
18. கோரக்கர்

அடுத்த 18 சித்தர்களின் பெயர் பட்டியல் –

1. கௌதமர்
2. அகத்தியர்
3. சங்கரர்
4. வைரவர்
5. மார்க்கண்டர்,
6. வன்மிகர்,
7. உரோமர்
8. புசண்டர்
9. சட்டைமுனி
10. நந்தீசர்
11. திருமூலர்
12. பாலாங்கிநாதர்
13. மச்சமுனி
14. புலத்தியர்
15. கருவூரார்
16. கொங்கணர்
17. போகர்
18. புலிப்பாணி  
   
திருமூலர்  :
அல்லது திருமூல நாயனார் சேக்கிழார் சுவாமிகளால் புகழ்ந்து பேசப்பட்ட அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார். இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர். திருமூலர் வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார்.பிற குறிப்புகள்:  

*சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணத்தில் திருமூலரின் வரலாறு விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சித்தர் இலக்கிய மரபில் திருமூலர் குறித்து வேறு பல கதைகளும் காணப்படுகின்றன. இவண் சேக்கிழார் கூறும் திருமூலரின் வரலாற்றுச் சுருக்கத்தைக் காணலாம்.

*திருக்கயிலையில் நந்திதேவரிடம் சிவஞான உபதேசம் பெற்ற சிவயோகி ஒருவர் இருந்தார். அவர் பெயர் சுந்தரநாதர். அவர் அகத்தியரைச் சந்திக்க விருப்பம் கொண்டு கயிலையிலிருந்து பொதிகை மலை நோக்கிப் பயணம் மேற்கொண்டார். வரும் வழியில் திருக்கேதாரம், பசுபதிநாதர் கோவில், அவிமுத்தம், திருப்பருப்பதம், திருக்காளத்தி, திருவாலங்காடு, சிதம்பரம் ஆகிய திருத்தலங்களை வழிபட்டுவிட்டுத் திருவாவடுதுறையை அடைந்தார்.

திருவாவடுதுறையில் பசுக்கள் சில அவலக்குரல் எழுப்புவதைக் கேட்டு அருகில் சென்று பார்த்தார். அங்குப் பசுக்களை மேய்க்கும் 'மூலன்' என்பவன் பாம்பு தீண்டி இறந்து கிடந்தான். "பசுக்களிடம் இவன் எத்தனை அன்புடன் இருந்திருந்தால் அவன் மரணத்திற்குப் பசுக்கள் இவ்வாறு வருந்தும்" என்று எண்ணிய சிவயோகியார் கருணை மேலீட்டால் தன் உடலை மறைவாக ஓரிடத்தில் கிடத்திவிட்டுப் 'பிரகாயப் பிரவேசம்' என்னும் சித்தியின் வாயிலாக மூலன் உடலில் தன் உயிரைப் புகுத்தித் திருமூலராக எழுந்தார். பசுக்கள் நாவால் அவரை நக்கித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின.

மாலைப் பொழுதாகியும் தன் கணவர் வீடு திரும்பாததால் இடையன் மூலனின் மனைவி அவனைத் தேடிக்கொண்டு அங்கு வந்தாள். கணவரைக் கண்டு அவரது கையைப் பிடிக்கப் போனாள். திருமூலர் சட்டென விலகி "எம்மைத் தீண்டாதே. உனக்கும் எமக்கும் எத்தொடர்பும் இல்லை" என்றார். பிறகு அருகிலிருந்த மடத்தினுள் சென்று சிவயோகத்தில் அமர்ந்தார். மூலனின் மனைவி செய்வதறியாது திகைத்தாள். அவளுக்குக் குழந்தைகளும் இல்லை. மனம் கலங்கியவாறே வீட்டிற்குச் சென்று இரவு முழுவதும் துயிலாமல் வருந்தியவாறு இருந்தாள். பொழுது விடிந்ததும் ஊர்ப் பெரியவர்களிடம் தன் கணவரைத் தன்னுடன் சேர்த்து வைக்குமாறு முறையிட்டாள். அவர்களும் அந்த மடத்திற்கு வந்தனர். சிவயோகத்தில் அமர்ந்திருந்த திருமூலரைக் கண்டு, "இவர் இறையருள் பெற்றவராகத் தெரிகிறது. இனி இவர் உன்னுடன் சேர்ந்து வாழ வாய்ப்பில்லை" என்று அவளிடம் கூறிச் சென்றனர்.

பிற குறிப்புகள்:  

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home